Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

பன்னிரென்டு ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தலங்கள்!

$
0
0

பன்னிரென்டு ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தலங்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன்.
நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர்.  சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு செய்வதும் அவசியம்.
 
குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.
 
இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.
 
இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.
 பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக – நடு நாயகராகத் திகழ்பவர் குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல்உண்டு.

அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி” என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள்எனப்படும்.

பொதுவாக குருபகவான்ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில்சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின்படியும்கோசார பலன்கள்மாறுபடும்.

பன்னிரென்டு ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தலங்கள்!

 

மேஷம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி.

ரிஷபம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.
மிதுனம்: சிதம்பரம் நடராஜர் தட்சிணாமூர்த்தி.
கடகம்: திருச்செந்தூர் முருகன் கோவில் தட்சிணாமூர்த்தி.
சிம்மம்: கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.
கன்னி: சங்கரன்கோவில் தட்சிணாமூர்த்தி.
துலாம்: மதுரை மீனாட்சி கோவில் தட்சிணாமூர்த்தி.
விருச்சிகம்: திருவிடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்).
தனுசு: ஆலங்குடி கோவில் தட்சிணாமூர்த்தி.
மகரம்: திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவில் தட்சிணாமூர்த்தி.
கும்பம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.
மீனம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி.

The post பன்னிரென்டு ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தலங்கள்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>