Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

திருமண தடை,தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

$
0
0

திருமண தடை,தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

 சாந்த சொரூபமான பொட்டு வைக்கும் ஆஞ்சநேயர் படம் என்று கடைகளில் கேட்டால் தருவார்கள். அதனை வாங்கி வந்து நல்ல நாளாக தேர்ந்தெடுத்து கிழக்கு பார்த்து பூஜை அறையில் வைத்து ஸ்ரீராமனையும், சீதையையும் மனதில் தியானித்து அனுமன் காயத்ரி அல்லது அனுமன் மூல மத்திரம் அல்லது ஸ்ரீராம் ஜெயராம் என்று மந்திரத்தை மனதை ஒருநிலைப்படுத்தி உச்சரிக்கவும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

ராம, ஆஞ்சநேய பக்தர்களை இனி தொடுவதில்லை!

 சொல்லி முடித்ததும் அனுமனின் வால் பகுதியில் தூய சந்தனத்தை வைத்து அதன்மீது குங்கும பொட்டு வைத்து பூஜை செய்யவும். பூஜையின்போது துளசி மட்டும் பயன்படுத்தவும். வேறு எந்த பூவையும் பயன்படுத்தக்கூடாது. பூஜை முடிவின்போது 13 உளுந்து வடைகள் செய்து நிவேதனம் செய்யவும்.

மற்ற நாட்களில் வாழைப்பழம் நிவேதனம் செய்யலாம். வடையை நல்லெண்ணையில் செய்யவும். ஒரு சிறிய பாத்திரத்தில் நீர்விட்டு துளசியை இட்டு பச்சை கற்பூரம் சேர்த்து தீர்த்தமாக பயன்படுத்தவும். இவ்வாறு செய்துவர விரைவில் திருமணம் கூடிவரும்.

 கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார்.

இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார்.  பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி.  அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post திருமண தடை,தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles


ஒரு கவிஞனைப் பற்றிப் பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


பலிக்கல்[சிறுகதை]


முதலியார் ஓலைகள்


கர்நாடகத்தில் மூடப்படும் தமிழ்ப் பள்ளிகள்- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற என்ஜினீயரிங் மாணவி: போலீஸ் விசாரணை


செய்வினை தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்


ஏப்ரல் 06 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.67 ; டீசல் ரூ.69.89


எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


அண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>