Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

மாந்திரீகத்தை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தம்

$
0
0

சென்னை : நாம்  பாம்பன் ஸ்வாமிகள் அருளிய காலசர்ப்ப தோஷம் போக்கும் துவித நாக பந்தத்தை பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தத்தை பற்றி தெரிந்துகொள்வோம். 

மயூர பந்தம் என்பது பகை விலக, மாந்திரிக, தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது. பொதுவாகவே முருக பக்தர்களை பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தீண்டாது , அதிலும் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி.

“வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி “

ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தமானது சகல பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது, இந்த மந்திரத்தை மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் பாராயணம் செய்துவந்தால் அணைத்து பிரச்சனைகள் மற்றும் தோஷங்களிருந்து விடுபடமுடியும்  என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. இந்த ஸ்லோகத்தை பாராயணம்செய்யும் நாட்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் அப்படி செய்து வந்தால் அணைத்துபிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்து கொண்டு எல்லா காரியங்களிலும் வெற்றியை காணலாம்.

முருகனுக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த மந்திரத்தை அன்று தொடங்கி பாராயணம் செய்வது சிறந்ததாகும். இந்த மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது மது பழக்கம், புகை பழக்கம் மற்றும்  அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் கோவில் சென்னையில் உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ளது , பக்தர்கள் இங்கு சென்று ஸ்வாமிகளின் ஜீவ சமாதியை தரிசித்து பலன் பெறலாம்.

பக்தர்களுக்காக மேலே மந்திரத்துடன் ஸ்வாமிகள் படம்

http://bit.ly/2bFRUdm

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan  #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மாந்திரீகத்தை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>