Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

திருமணத்தடை தீர்க்கும் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர்

$
0
0

 கடலூர் அடுத்து திரு மாணிக்குழியில் அமைந்துள்ள திருத்தலம்.  ஈசன், வாமனபுரீஸ்வரர் என்னும் பெயரில் அம்புஜாட்சி அம்பாளுடன் அருள்பாளிக்கிறார்

 Thirumanikuzhi-Vamanapureeswarar-Shiva-Temple6 ஒருமுறை இந்திரனின் தாயார் அதிதி தேவி திருமறைக்காடு (வேதாரண்யம்) திருத்தலத்திற்கு வந்து நெய் தீபம் எற்றி ஈசனை வழிப்பட்டார். அப்போது விளக்கின் சுடர் அணையும் நிலையில் இருந்தது.அந்த நேரத்தில் பசியால் அலைந்து கொண்டிருந்த எலியின் மூக்கு பட்டு விளக்கின் நெய்யை சாப்பிட முயன்றது. எலியின் மூக்கு பட்டு விளக்கின் திரி தூண்டிவிடப்பட்டதில் விளக்கின் சுடர் பிரகாசமாக எரிய அரம்பித்தது.

 8478345546_cfc0b3e1f1_bஇது தற்செயலாக நிகழ்ந்தாலும்  எலியின் செயலால் மனம் மகிழ்ந்த இறைவன், அந்த எலியை மறுபிறவியில் மகாபலி சக்கரவார்த்தியாக பிறக்கச் செய்தார். மறுபிறவியில் சிவனின் மேல் பக்தி கொண்டு தர்ம வாழ்வை மகா பலி மேற்கொண்டான். இருப்பினும் அவன் அசுர வம்சத்தவன் என்பதால் தேவர்கள் அவனை அழிக்கும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணுவும், வாமனராக குள்ள அவதாரம் எடுத்தார். பின்னர் மகாபலியின் யாசகசாலைக்கு சென்று மூன்றடி மண் கேட்டார். தர்மத்தின் வழி நின்ற மகாபலி அதை தர ஒப்புக்கொண்டான். முதல் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்தில் தள்ளி  பாதாளலோகத்தையும் அளந்து முடித்தார்.

 மகாபலி தர்மவான் என்பதால், தர்மம் செய்தவனை துன்புறுத்திய பாவம் வாமனரைத் தொற்றிக் கொண்டது. இதையடுத்து அந்த தோஷம் நீங்குவதற்காக திரு மாணிக்குழி தலம் வந்தார் வாமனர். அங்கு ஈசனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றர். இதனால் அத்தல இறைவன் வாமனபுரீஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். இத்தல அம்பாளின் திருநாமம் அம்புஜாட்சி என்பதாகும்.

 Thirumanikuzhi Templeவட நாட்டைச் சேர்ந்த ருத்ராட்ச வணிகன் ஒருவன் இருந்தான். அவனது பெயர் அத்ரி என்பதாகும். அவன் இந்த தலத்தின் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருடர்கள் அவனிடம் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முற்பட்டனர். ஆனால் ஈசன் அந்த வணிகனை திருடர்களிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார். எனவே இத்தலத்திற்கு உதவி மாணிக்குழி என்றும் ஈசனுக்கு உதவி நாயகர் என்றும் அம்பாளுக்கு உதவிநாயகி என்றும் பெயர் ஏற்பட்டது.

 கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து மூலவரை தரிசிக்க உள்ள செல்லும் வழியில் வாமன அவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது மூலவருக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும்  நான்கு தூண்களாக அமைந்துள்ளன. மூலவரான வாமனபுரீஸ்வரா சன்னிதி எப்போதும் திரைச்சீலை போடப் பட்டு காணப்படுகிறது. திரைச்சீலையில் பதினொரு ருத்ரர்களில் ஒருவரான பீமருத்திரர் வடிவம் உள்ளது. அர்ச்சனை, தீபாராதனை யாவும் முதலில் பீமருத்திரருக்கே செய்யப்படுகிறது. அதன்பிறகே மூலவருக்கு திரை விலக்கி இது நடைபெறும். இது முடிந்ததும் மீண்டும் திரைச்சீலை போடப்பட்டு விடும்.

43_bigமகாவிஷ்ணு இங்கு வந்து வழிபட்ட போது, ஈசன் தன்னுடைய ருத்ர கணங்களில் ஒருவரான பீமசங்கரன் என் பவரை பூஜையைக் காவல் காக்கும் காவல் கணமாக நியமித்தார். ஆகவே இத்தலத்தில் இறைவன் எப்போதும் இறைவியுடன் அம்மையப்பனாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இங்கு தனியாக பள்ளியறை கிடையாது. இங்கு கருவறையே பள்ளியறையாக விளங்குவதால். இவ்வாலயத்தில் அர்த்தஜாம பள்ளியறை பூஜை செய்யப்படுவதில்லை.

இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு திருமணபூஜை செய்து வந்தால், திருமண தடைகள் அகலும். இத்தலத்தில் உள்ள யுகலிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர்  நடராஜர் சப்தமாதர்கள், அறுபத்து மூவர் சன்னிதிகள் விசேஷமானவை. இங்குள்ள பைரவரை ராகுகால வேளைகளிலும் அஷ்டமி நாட்களிலும் புனுகு சாத்தி, மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், உடற்பிணிகள் விலகும் என்று பக்தர்கலால் நம்பப்படுகிறது. திருவோண நாளில் மகாவிஷ்ணு இங்கு ஈசனை பூஜிப்பதாக ஜதீகம் உள்ளது.

அமைவிடம்

கடலூரில் இருந்து 10-வது கீமி உள்ளது.

தொடர்புக்கு:

இ.ஒ.இரத்தினம்மாள்

செல் : 9443567606

முத்து : 9442911124

அர்ச்சகர் : நடராஜன் : 8940730140

செய்தி : ப.பரசுராமன்

படங்கள் : வசந்த்

The post திருமணத்தடை தீர்க்கும் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles


3 மந்திரங்களின் பலனைத் தரும் பெருமாள் மந்திரம்!


மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…


படுகளம் -13 (நாவல்)


கர்நாடகத்தில் மூடப்படும் தமிழ்ப் பள்ளிகள்- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற என்ஜினீயரிங் மாணவி: போலீஸ் விசாரணை


செய்வினை தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்


ஏப்ரல் 06 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.67 ; டீசல் ரூ.69.89


எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


அண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>