Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

திருவதிகையில் திரிபுர சம்காரம்

$
0
0

  கடலூர் மாவட்டம், பன்ருட்டி அருகே திருவதிகையில் வீரட்டேஸ்வரர் திரிபுர சம்காரம் நடைபெற்றத் தலம். இறைவனை சாந்தஸ்வரூபன், காருண்யமூர்த்தி, தீனதயாளன்,உலகரட்சன்
என்றெல்லாம் போற்றித் துதிப்பது உண்டு. வணங்கி வழிபடுவதும் உண்டு. ஆனாலும் அவன் எல்லா காலங்களிலும் சாந்த ஸ்வரூபியாகத் தோன்றுவது இல்லை. உலக நிர்வாகத்தில் உக்கிரமூர்த்தியாகத் தோன்றி அவன் ஆடிமுடித்த கோபதாண்டவங்களும் உண்டு. அவ்வாறு thi (3)அவனது வீரம் விளைந்து இவ்வையம் செழித்த திருத்தலங்களில் பிரசித்தமானவை எட்டு. அதாவது திருக்கண்டியூரில் பிரம்மனின் தலைகளில் ஓன்றைக் கொய்தது… திருக்கோவலூரில் அந்தாகாசூரனை வதம் செய்தது திருவதியாயில் திரிபுரதகனம் திருப்பறியலூரில் தக்கான் சிரத்தைத் தடிந்தது. திருவிக்குடியில் சலந்திரனைக் கொன்றது. திருவழுவூரில் யானையை உரித்து அணிந்து கொண்டது. திருக்குறுக்கையில் மன்மதனைஎரித்தது. எட்டாவதாக யமனை காலால் ஊதைத்த திருக்கடவூர். இந்த எட்டும்தான் சிவபிரானின் வீரஸ்தானங்கள் அல்லது வீரட்டானங்கள் என விளங்குகின்றன. சைவப் பெரியார்கள் வரிசைபடுத்திய அந்த எட்டு திருத்தலம் 3வது திருத்தலம்.

திரிபுர சம்காரம் ஏன்றால் ஏன்ன?

  தாருகாட்சன்,கமலாட்சன்,வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும் தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் ( அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பைPC240547 (7) நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர். தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவுதான் உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பாலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஓரே சமயத்தில் தேவர்கள், அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஓருவரை குடாமுழா முழக்குபவனாகவும், ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம் :  கடலூர் மாவட்டம், பன்ருட்டியிலிருந்து 3 வது கி.மீட்டரில் உள்ளது.

தொடர்புக்கு :

இ.ஓ. நாகராஜ் – 9443441292
அர்ச்சகர் சீனிவாசன் – 9442780111

செய்தி : ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்

The post திருவதிகையில் திரிபுர சம்காரம் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles


ஒரு கவிஞனைப் பற்றிப் பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…


படுகளம் -13 (நாவல்)


கர்நாடகத்தில் மூடப்படும் தமிழ்ப் பள்ளிகள்- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற என்ஜினீயரிங் மாணவி: போலீஸ் விசாரணை


செய்வினை தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்


ஏப்ரல் 06 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.67 ; டீசல் ரூ.69.89


எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


அண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)



Latest Images