Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

ஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்

$
0
0

  ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். ஆதித்யா என்றால்  சூரியன். ஹ்ருதயம் என்றால் குறிப்பாக இதயத்திற்கு ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை என்று பொருள்.ராமரும், ராவணனும் போரிடும் போது ஒரு தருணத்தில்  ராமர் தடுமாற அகத்திய முனி ஸ்ரீ ராமருக்கு இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தைக் கொடுத்தார். இந்த மந்திரத்தை மூன்று முறை ஜெபித்த பிறகு ராமர் இலங்கை வீரன் ராவணனைப் போரில் வென்றார்.

ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைப் போற்றி படைக்கப்பட்ட ஒரு சிறப்பான மந்திரமாகும். இது வால்மீகி இராமாயணத்தின்  போர் அத்தியாயம் என்ற யுத்த காண்ட பகுதியில் 31 சுலோகங்களைக் கொண்டது.

  • ஆதித்ய ஹ்ருதயம் உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்:
  • ஆதித்ய ஹ்ருதயம் நலம் மற்றும் சந்தோஷம் தரும் சூரிய பகவானின் பிரார்த்தனை மந்திரமாகும்.83efd1be971844a9dc76fdcac10e80b9
  • ராமர் போர் துறையில் ஆழ்ந்த சிந்தனையில் நின்றபோது   அகத்தியர் இந்த மந்திரத்தைக் கூறினார். இந்த மந்திரத்தின் மகிமையால் இராவணன் தோற்றான்.
  • “ஓ ராம” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தால் உங்கள் எதிரிகளை வென்று விடலாம். இன்றைய கால கட்டத்தில் விரோதிகளையும் அவர்களின் சூழ்ச்சிகளையும் வெற்றி பெற இந்த மந்திரத்தை நித்தியம் உச்சரிக்க  வேண்டும்.
  • ஆதித்ய ஹ்ருதயத்தை சூரியனின் பலம் பெற்று இருதயம் உறுதி பெற தினமும் பாராயணம் செய்தால் மிகவும் நன்மைகள் நடக்கும். இதை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  • சூரியக் கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட இந்த மகத்தான புனித  மந்திரத்தை உச்சரித்தால்  அனைத்து எதிரிகளின் சூழ்ச்சியும்  அழிந்து வெற்றி கிடைக்கும்.நினைத்த காரியம் நடந்து முடியும்
  • பஞ்ச பாண்டவர்களில் மூத்த சகோதரரான தர்ம ராஜா சூரியனை வழிபட்டு அக்ஷய பாத்திரம் பெற்று தனது விருந்தினர்களை மகிழ்வித்தார்.
  • ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்..
  • அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள்.

The post ஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>