திருவண்ணாமலையில் ஆஞ்சநேயரின் தாயார் சுழல் கிரிவலம் வந்து தனக்கு குழந்தைப் பிறக்கவில்லை வருந்தி உண்ணாமலை தீர்த்தத்தில் நீராடியப்பின் ஆஞ்சநேயர் பிறந்தார்.
இராம பக்தர்களில் மிகவும் சிறந்தவர் ஆஞ்சநேயர் அவருடைய அன்னை அஞ்சனாதேவி. தனக்கு குழந்தை பிறக்கவில்லையே என்று அஞ்சனாதேவி பல திருத்தலங்களுக்கு சென்று புண்ணிய நீராடி தெய்வங்களை வணங்கிப் பிரார்த்தனை செய்தார். புண்ணிய நதிகளையும், தவஸ்தலங்களையும் தரிசித்தவாறே வந்த அஞ்சனாதேவி திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அங்கிருந்த பல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினாள். நாள்தோறும் கிரிவலம் மேற்கொண்டாள்.
கிரிவலப்பாதையில் உண்ணாமலையம்மன் தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. கோடை காலத்தில் வற்றி விடுகிறது என்றாலும் சிவபெருமானின் தெய்வத் துணையாய் ஆவதற்கு அம்பிகை தவம் செய்த இடம் என்பதால் சூட்சமமாய் இங்கு எப்போதும் தீர்த்தம் உண்டு.திருவண்ணாமலையை அஞ்சனாதேவி சுழல்வல கிரிவலம் செய்தாள். அது என்ன என்பதை தெளிவாக பார்ப்போம். கௌதம முனிவர் ஆசிரமத்துக்கு அருகில் குடில் அமைத்து மலைவலம் வந்து அருள்பெற்றான்.
ஓருவர் தன்னைத் தானே சுற்றிக்கொள்வது,ஆத்மபிரதட்சிணம் எனப்படும். நம் உள்ளிருந்து இயக்கும் கடவுளுக்கு வணக்கத்தை தெரிவிக்க வலப்புறமாக சுற்றுவது இது.இவ்வாறு தன்னைத்தானே சுற்றியவாறு திருவண்ணாமலையை கிரிவலம் வருவது சுழல்வல கிரிவலம் எனப்படும்.கிரிவலம் என்றாலே பலர் சற்று யோசிக்கின்றனர்,14 கி.மீட்டர் சுற்றளவை எவ்வாறு நடக்க முடியும் என சற்று ஆச்சமும் கொள்கின்றனர். முடியும் என்ற நிலையையும் உறுதியையும் மட்டுமே கைக்கொள்ளுங்கள் அதற்கு உறுதுணையாய் அருணாசலேஸ்வரன் இருப்பார் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஓரே நாள் இரவில் தொடங்கி சில மணி நேரங்களில் விடியுமுன்னே முடிவடைகிறது கிரிவலம்.
ஆனால் அஞ்னாதேவி செய்த கிரிவலம் இரண்டுகளால் மட்டுமே செய்கிற கிரிவலம் அல்ல. மேலே சொன்னதுபோல் சுழல்வல கிரிவலம் முறையே தொடர்ந்து இரண்டு நாட்கள் திருவண்ணாமலையை கிரிவலம் வந்தார் என்றால் என்னே அவள் பக்தி. இப்படி கிரிவலம் செய்த அஞ்சனாதேவி ஆஞ்சநேய மகாபிரபுவை கர்ப்பம் தாங்கம் நல்வரம் பெற்ற புண்ணிய இடமே காயத்ரி தரிசனப்பகுதி.
மேலும் குழந்தைகளுக்கு முதலாண்டு நிறைவில் செய்யப்படும் அன்னம் பிராசனம் அதாவது முதன் முறையாக அன்னடம் உட்டப்படும் விழா ஆஞ்சநேயருக்கு திருவண்ணாமலையில் தான் நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உண்ணாமலையம்மன் தீர்த்தக் கரையில் அன்னதானம் செய்வோருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். குழந்தைகள் சிறந்த ஓழுக்கத்துடன் தெய்வபக்தியுடன் வளர்ந்து பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பர். குழந்தை பேறு இல்லாமல், வருந்துபவர்கள் பலர், அவர்கள் அருணாசலேஸ்வரனை மனதில் நன்கு தியானித்தவாறே செவ்வாய் கிழமையும், புதன் கிழமையும் கூடிவரும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வரவேண்டும்.
அஞ்சநேயருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே உள்ள தொடர்பை காண்போம்.
ஆஞ்சநேயரும் திருவண்ணாமலையும்:-
சீதாபிராட்டியின் பூஜைக்காக பலவித லிங்கங்களை அவசர அவசரமாக கொடுத்தவர். சரியான நேரத்திற்கு வரமுடியாமல் போனதால் இவ்வாறு காலம் தாழ்த்தி வந்து விட்டோமே என்று மனம் வருந்தினாராம். தமது நீண்ட வாலால் அல்லவா லிங்கமூர்த்திகளை கொண்டு வந்து சேர்த்தார். பக்தி பெருக்கினால் அவர் அவ்வாறு செய்தார் எனினும், அதற்கு பிராயசித்தம் தேடியும் அந்த லிங்கமூர்த்திகளுக்கு பல பஞ்ச பூத சக்திகளை அளிக்க எண்ணியும், அதற்கான பூஜை முறைகளை அறிவதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார். அச்சமயத்தில் ஓரு நாள் மார்க்கண்டேய் மகரிஷியோ அஞ்சநேயர் முன்னிலையில் வந்தார். அவருடைய வருகையால் அஞ்சநேயர் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார். சிவபெருமான் தமது காலால் காலனையும் எட்டி உதைக்கும்படி செய்த ஞாலம் புகழ் மகரிஷி அல்லவா அவர், அஞ்சநேயரை பார்த்த மார்க்கண்டேயர் தமக்கு அருணாசலேஸ்வரர் அருளிய ரசமணி சித்தியை பெற தகுதி முற்றிலும் வாய்ந்தவர் அவரே என உணர்ந்தார்.
அஞ்சநேயரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அவருடன் திருவண்ணாமலையை கிரிவலம் செய்து அங்குள்ள ஓரு பெரியமலை மீது அமர செய்து ரசமணி சித்தியை முறையாக உபதேசம் செய்தார், மார்க்கண்டேய மகரிஷி இந்நிகழ்ச்சி நடந்தது அனுமந்த் ஜெயந்திக்கு முந்த பௌர்ணமியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பௌர்ணமி என்பதால் தான் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் வருவது மிகவும் பலன் தரக்கூடிய தாகும். எனவே தான் மற்ற நாட்களை விட மிக அதிகமாக அண்மை காலத்தில் இலட்சகணக்கில் மக்கள் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் செய்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஓவ்வொரு மாதப்பௌர்ணமியிலும் சந்திர ஓளியிலும் பல அபூர்வ மூலிகைகள் மலர்வதாக பெரியோர்கள் அறிந்து கூறியுள்ளனர். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று தோன்று சந்திரகிரணங்கிள் தாத்பரியங்கள் வெவ்வேறு தன்மை உடையவனாய் உள்ளன. எனவே ஓவ்வொன்றும் வேவ்வேறு வித கர்ம வினைகளையும், நோய்களையும் மனத்துன்பங்களையும் நீக்கும் சக்தி பெற்றனவாய் விளங்குகின்றன.
மார்க்கண்டேய மகரிஷி அருணாசஸ்வரரின் அருளால் அகத்திய முனிவர் மூலமாக 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து அவற்றை வழிபாடு செய்யும் முறைகளை தெரிந்து கொண்டது திருவண்ணாமலையில் தான். அவர் 108 லிங்க பூஜை வழிபாட்டின் பலனாக 64 வித ரசமணி கோளங்களை திருவண்ணாமலையின் எட்டுத்திசைகளிலும் பூமியின் அடியில் பதித்து எட்டுதிக்கு லிங்க பூஜைகளையும் ஒதி தேவ மூர்த்திகளின் முன்னிலையில் சிறப்பாக நடத்தினார்.ஓவ்வொரு திக்கிற்கும் எட்டு ரசமணி கோளங்களை அஷட் கோணவடிவில் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன. எனவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தாலும் அந்த ரசமணியின் தெய்வீக சக்தி குன்றாதாம். ஜோதிகயாக அருள் புரிந்து கொண்டிருக்கிறது.
செய்தி : ப.பரசுராமன்
படங்கள்:ப.வசந்த்
The post சுழல் கிரிவலத்திற்கு வந்த ஆஞ்சநேயரின் தாயார்! appeared first on SWASTHIKTV.COM.



